நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் 24ம் ஆண்டு ஆடிப் பொங்கல் விழா நடக்கிறது.
நேற்றுமுன்தினம் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வேப்பிலை கையில் ஏந்தி சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர். அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நிகழ்ச்சியாக நேற்று முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊருணியில் கரைத்தனர்.

