ADDED : ஆக 16, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சி உடைச்சியார் வலசை பெரிய முத்து மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது.ஆக.6ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி தினமும் ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் அம்மனுக்கு அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஆக.13 ல் பூஜாரி கருப்பையா கரகம் எடுத்து வந்த போது பக்தர்கள் வரவேற்றனர்.
நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலமாக சென்று அய்யன் கோயில் அருகேயுள்ள ஊருணியில் கரைத்தனர்.----

