/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சி எல்லை; டி.ஜி.பி.எஸ்., கருவியால் அளவீடு துவக்கம்

ADDED : மே 14, 2024 12:09 AM

திருவாடானை : தொண்டி அருகே முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சி எல்லையை டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்யும் பணிகள் துவங்கியது.
தொண்டி அருகே முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சிகளிடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை உள்ளது. இரு ஊராட்சியை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபடுவதும், அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்வதுமாக இருந்தனர்.
இந்நிலையில் மே 2ல் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் அதிகாரிகள் கூறிய கருத்துகளை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து மே 4 ல் ராமநாதபுரத்தில் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கார்த்திகேயன், இரு கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மே 13 ல் (நேற்று) நில அளவீடு பணிகளை மிகத் துல்லியமாக நிலத்தின் இருப்பிடத்தையும், எல்லைகளையும் பதிவு செய்யும் டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை 10:00 மணிக்கு டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.
மாலை 4:00 மணி ஆகியும் எல்லை கற்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்றும் (மே 14), நாளையும் அளவீடு பணிகள் தொடரும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.