/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சியி செயல் அலுவலர் பணியிடம் 6 மாதங்களாக காலி
/
பேரூராட்சியி செயல் அலுவலர் பணியிடம் 6 மாதங்களாக காலி
பேரூராட்சியி செயல் அலுவலர் பணியிடம் 6 மாதங்களாக காலி
பேரூராட்சியி செயல் அலுவலர் பணியிடம் 6 மாதங்களாக காலி
ADDED : மார் 25, 2024 06:28 AM
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் ஆறு மாதமாக ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேகர் அக்.,ல் மாற்றுத்திறனாளி பெண்ணை அவதுாறாகப் பேசியதன் பேரில் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றும் மாலதி கூடுதல் பொறுப்பாக பணி செய்கிறார். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சாயல்குடி 110 கி.மீ.,ல் உள்ளது. அவசர அத்தியாவசிய தேவைகளுக்காக செயல் அலுவலரை சந்திப்பதற்காக பொதுமக்கள் சென்றால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
சாயல்குடி பேரூராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.
எனவே சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய செயல் அலுவலரை நியமிக்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

