ADDED : மார் 02, 2025 05:42 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் 15வது ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங் தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர்கள் காடல்குடி செண்பகராஜ், நரசிங்க கூட்டம் கிறிஸ்து ஞான வள்ளுவன், இப்ராஹிம், மின்வாரிய ஊழியர் ராமையா உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
சாரணர் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் லட்சுமணன், பிரபு இம்மானுவேல், செலஸ்டின் மகிமை ராஜ், பாரதி, இளநிலை உதவியாளர் சரவணகுமார், ஆய்வக உதவியாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் திவ்யா நன்றி கூறினார்.