ADDED : மே 21, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மங்கலஇசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் மூலவரான முத்து மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
