/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் கொடியேற்றம்
/
நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் கொடியேற்றம்
நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் கொடியேற்றம்
நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் கொடியேற்றம்
ADDED : மே 10, 2024 04:35 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற பெருமை பெற்ற இங்கு மே 12 இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கும். மே 13 காலை 6:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி வலம் வருகிறார்.
தினமும் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி இந்திர விமானம், நந்தீஸ்வரர், ஹம்சன், பூதம், சிம்மம், யானை, ரிஷபம், கைலாச வாகனம், கிளி, குதிரை வாகனங்களில் வீதி உலா வர உள்ளனர். மே 18ல் திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டல், மே 20ல் திருமுறை பட்டயம் வாசித்தல், சுந்தரமூர்த்தி சுவாமி திருஊடல் தீர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 21 காலை 8:00 மணி கோயில் நான்கு மாட வீதிகளில் தேரோட்டமும், மறுநாள் தீர்த்த உற்ஸவம் நடக்க உள்ளது. தொடர்ந்து மே 26 காலை உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.