/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'விமான நிலையங்களுக்கு தேவர் பெயர் சூட்டுங்கள்'
/
'விமான நிலையங்களுக்கு தேவர் பெயர் சூட்டுங்கள்'
ADDED : பிப் 15, 2025 05:54 AM
கமுதி: மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டுமென உ.பி.,யை சேர்ந்த பகுஜன் தேசிய கட்சி(அம்பேத்கர்) பிரமோத் குரீல் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு உத்திரப்பிரதேச மாநில பகுஜன் தேசிய கட்சியின் தலைவர் பிரமோத் குரீல் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தேவர் வாழ்ந்த வீடு, பூஜை அறை, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாளிடம் நலம் விசாரித்தார். அவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் முக்கியமான கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும். நமது நாடு விடுதலை பெற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து தேச விடுதலைக்காக பாடுபட்டவர். தமிழகத்தில் காலம் காலமாக ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலத்திற்கும், ஜாதி பிரிவினை பேசி இரு சமூக மக்களிடையே பகை உணர்வை மட்டும் வளர்த்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பொதுவான தலைவராக அடையாளப்படுத்த வேண்டும். தேவரின் ஆன்மிக சொற்பொழிவு, கொள்கைகள், அரசியல் குறித்து இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். டி.என்.டி., பிரிவில் உள்ள மக்களுக்கான உரிமைகள், உதவிகள் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்றார்.
உடன் அகில இந்திய டி.என்.டி., நலச் சங்கத்தின் தமிழக பொதுச் செயலாளர் வீரபெருமாள், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுஜன் லுாயிஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

