/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லந்தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு
/
இல்லந்தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு
ADDED : ஆக 15, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கோட்ட அஞ்சல்துறை சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஊர்வலத்தை கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் துவக்கி வைத்தார். இன்று (ஆக.15ல்) இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி அரண்மனை, சாலைத்தெரு, அக்ரஹாரம் வீதி உள்ளிட்ட முக்கிய ரோடுகள் வழியாக கையில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி சேக்தாவூத், உபகோட்ட ஆய்வாளர் சரத், அஞ்சலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.