/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ADDED : மார் 28, 2024 10:49 PM
ராமநாதபுரம் : இரு நாடுகளும் மீனவர்களை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படுவதும், சிறை தண்டனை விதிக்கப்படுவதும் வேதனை அளிக்கிறது. இரு நாட்டு அரசுகளும் இரு நாட்டு மீனவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். இருநாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு.
எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை அழைத்துப் பேசி சுமூக முடிவுகள் எடுக்க வேண்டும். அதே போல இருநாட்டு மீனவர் பரஸ்பர குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்.
நாட்டுப்படகு மீனவர் மற்றும் விசைப்படகு மீனவர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை மீனவர்களுடன் நடத்த வேண்டும். இதனடிப்படையில் ஏற்படும் முடிவுகள் அடிப்படையில் இலங்கை மீன்பிடி சட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கலாம். இதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
மீனவர்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கும் அரசியல் கட்சிகளாக இல்லாமல், மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முயற்சிஎடுக்க வேண்டும் என்றார்.