/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இயற்கை பொக்கிஷம்: ராமநாதபுரம் அருகே எழில்மிகு மாங்குரோவ் காடுகள்: சுற்றுலாப் பயணிகள் மனதை கொள்ளை கொள்கிறது
/
இயற்கை பொக்கிஷம்: ராமநாதபுரம் அருகே எழில்மிகு மாங்குரோவ் காடுகள்: சுற்றுலாப் பயணிகள் மனதை கொள்ளை கொள்கிறது
இயற்கை பொக்கிஷம்: ராமநாதபுரம் அருகே எழில்மிகு மாங்குரோவ் காடுகள்: சுற்றுலாப் பயணிகள் மனதை கொள்ளை கொள்கிறது
இயற்கை பொக்கிஷம்: ராமநாதபுரம் அருகே எழில்மிகு மாங்குரோவ் காடுகள்: சுற்றுலாப் பயணிகள் மனதை கொள்ளை கொள்கிறது
ADDED : ஆக 29, 2024 05:07 AM

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் கோரைக்குட்டம் கிராமத்தில் மாங்குரோவ் காடுகள் அதிகளவு வளர்ந்துள்ளன.
சதுப்பு நிலம் நிறைந்த இப்பகுதியில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் சதுப்பு நிலக்காடுகள், அலையாத்தி காடுகள் அதிகளவு உள்ளன. கடலும் ஆறும் சங்கமிக்கும் கோரைக்குட்டம் கழிமுகத்துவாரத்தில் ஆழம் குறைந்த பகுதியில் கரையோரங்களில் மிகுதியாக மாங்குரோவ் காடுகள் உள்ளன.
மண்ணும் நீரும் சேர்ந்து சேறுநிறைந்தஇடங்களில் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்திருக்கும். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அளவுக்கு அதிகமான உப்புத்தன்மையை நீக்குவதற்கு இம்மரங்கள் உப்பு சுரப்பிகளை பெற்றுள்ளன.
இவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வடித்து தண்டு மற்றும் இலைகள் மூலம் வெளியேற்றுகின்றன. அதிக வெப்பத்தால் நீராவி போக்கை குறைப்பதற்காக கடினமான மற்றும் சதைப் பற்றான இலைகளை பெற்றுள்ளன. அலையாத்தி மரங்கள் மூட்டு வேர்களை பெற்றுள்ளன.
அவை அலையாத்தி மரங்களின் கிளைகள் மற்றும் தண்டுகளில் இருந்து வளரும் வேர்கள் நிலை இல்லாத அடித்தளத்தில் பற்றிக்கொண்டு அசையாமல் இருப்பதற்கு உதவுகின்றன. நீர் தேங்கி நிற்கும் களிமண் பாங்கான இடங்களில் வாயு பரிமாற்றம் நடக்கிறது என்பதால் இப்பகுதியில ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
அதனை எதிர்கொள்ள மண்ணில் இருந்து மேல் நோக்கி வளரும் சுவாச வேர்களை பெற்றுள்ளன. இங்கு மீன்கள், நண்டுகள், இறால், சிப்பிகள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு உறைவிடமாகவும் விளங்குகின்றன. கடலில் பவளப்பாறைகளுக்கு அடுத்தபடியாக அதிக உற்பத்தி திறன் கொண்ட சூழலமைப்பு கொண்டதாகும்.
அலைகளின் தீவிரத்தை குறைத்தும் கடலோரப் பகுதிகளில் காக்கும் அரணாகவும் காடுகள் உள்ளது. மாங்குரோவ் காடுகளை காண்பதற்காக கோரைக்குட்டம் செல்லும் பாலத்தின் வழியாக இயற்கையை ரசிப்பதற்காக ஏராளமானோர் விடுமுறை தினங்களில் வந்து செல்கின்றனர். இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

