/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவாஸ்கனி எம்.பி., உறவினர் கார் கண்ணாடி உடைப்பு: எஸ்.பி., சந்தீஷ் விசாரணை

ADDED : ஏப் 20, 2024 02:12 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நவாஸ்கனி எம்.பி., உறவினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து எஸ்.பி., சந்தீஷ் விசாரிக்கிறார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு நேற்று மாலை நிறைவடையும் நேரத்தில் பரமக்குடி பாரதியார் நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி தேர்தல் பொறுப்பாளரான நவாஸ்கனியின் உறவினர் நிஜாம் காரில் வந்தார்.
அங்கிருந்த பா.ஜ., வினர் இந்தப் பகுதியில் உங்களுக்கு என்ன வேலை என கேட்டனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது காரின் பின் பகுதியில் ரமேஷ் என்பவர் கையால் ஓங்கி அடித்ததில் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து அங்கு வந்த எஸ்.பி., சந்தீஷ், பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் விசாரணை நடத்தினர்.
சந்தீஷ் எஸ்.பி., கூறுகையில், காரின் கண்ணாடியை உடைத்தவர் போதையில் இருக்கிறார். நிஜாம் மற்றும் வேறு சிலர் வாக்குவாதம் செய்த போது கண்ணாடியை உடைத்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதியப்பட்டு சி.சி.டி.வி., பதிவு அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றார்.