/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவ கொடியேற்றம் மே 21 ல் தேரோட்டம்

ADDED : மே 14, 2024 12:08 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அருள் பாலிக்கும் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ கொடியேற்றம் நடந்தது.
நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருவர். இங்கு வசந்த உற்ஸவ விழா நேற்று காலை 7:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தினமும் சவுந்தர்ய நாயகி அம்பாள், நாகநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளனர். மேலும் மே 18ல் திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டல் நிகழ்வு, மே 20ல் திருமுறை பட்டயம் வாசித்தல், சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடல் திருத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
மே 21 காலை 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வருகின்றனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர், சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.