நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: பெருநாழி அருகே டி.வி.எஸ்.புரம் ஊராட்சியில் அருப்புக்கோட்டை செல்ல பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாத நிலை உள்ளது.
இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் பஸ் ஏறுவதற்காக டி.வி.எஸ்.,புரம் மும்முனை சந்திப்புக்கு வருகின்றனர். வெயிலிலும், மழையிலும் திறந்த வெளியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கமுதி யூனியன் அலுவலர்கள் இடத்தை பார்வையிட்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.