/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் குறுங்காடு வளர்ப்பில் அலட்சியம்; பராமரித்து அதிக மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்

ADDED : மார் 09, 2025 05:21 AM

மாவட்டத்தில் பசுமையான சூழலை அதிகரித்து சுற்றுச் சூழலை பாதுகாத்திடும் நோக்கத்தில் 429 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.30 கோடியில் பயன்பாடற்ற தரிசு நிலங்கள், குப்பை, கழிவுகள் தேங்கிய இடங்கள், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த இடங்களை தேர்வு செய்து 1000 குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குறுங்காடுகளில் புங்கன், பூவரசு, புளி மற்றும் மாதுளை, சீதா, நெல்லி ஆகிய பலன்தரும் மரங்களும் உள்ளன.
58 ஏக்கரில் சீமைக்கருவேலம் மரங்கள் நிறைந்த நிலங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டுஉள்ளது. நீராதாரத்திற்காக ஏராளமான உறைகிணறுகள், பண்ணைக்குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக குறுங்காடு வளர்ப்பில் சாதனை சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தநிலையில் தொடர் பராமரிப்பு இல்லாமல் மரக்கன்றுகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு கருகி வருகின்றன. சில இடங்களில் மர்ம நபர்கள் மரக்கன்றுகளை சேதப்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை சூழலை அதிகரிக்க குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை விரிவுப்படுத்தி மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.