/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி
/
புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி
ADDED : மே 02, 2024 05:03 AM

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து பள்ளமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் கீழரத வீதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளின் முன்பு தேங்கியது.
இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு இருந்து கீழ ரதவீதி வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
அப்போது கால்வாய் பணியை சரி செய்யும் போது கால்வாய் விரிசல் ஏற்பட்டது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு புதிதாக கட்டப்பட்டு சேதமடைந்துள்ள கால்வாயை மட்டும் அகற்றிவிட்டு பள்ளமாக இருப்பதால் தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

