ADDED : மே 22, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளமனுார், பழங்குளம் கிராமத்தில் குடியிருப்பு அதிகரிப்பால் பழைய மின்மாற்றி பழுதடைந்தது. குறைந்த மின்னழுத்த குறைபாட்டால் மின்சாதனங்கள் பழுதாகின. இதனால் பழங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
புதிய மின்மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். ––
