/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை தேவை புதுமடம் டிரைவர்கள் கோரிக்கை

ADDED : ஆக 13, 2024 12:17 AM

ராமநாதபுரம், : சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என புதுமடம் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மண்டபம் அருகே புதுமடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், சொந்த வேன், கார் வைத்துள்ள சிலர் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு செல்கின்றனர். இது ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி நேரடியாக கள ஆய்வு செய்து சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை வேண்டும்.
அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.