/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
/
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : மே 04, 2024 04:53 AM

கமுதி: கமுதி--முதுகுளத்துார் ரோடு கோட்டைமேடு கல்லுாரி களஞ்சியம்நகர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கமுதியில் இருந்து கோட்டைமேடு, கருங்குளம், பேரையூர், சித்திரக்குடி வழியாக முதுகுளத்துாருக்கு ரோடு வசதி உள்ளது. இது முக்கியமான ரோடு என்பதால் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இவ்வழியில் அடிக்கடி ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
கோட்டைமேடு அருகே சேகநாதபுரம் வரை 500மீ., ரோடு சேதமடைந்துள்ளது. இங்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு பணி முடிவடைந்த நிலையில் கமுதி - -முதுகுளத்துார் ரோடு கோட்டைமேடு களஞ்சிய நகர் அருகே வளைவில் உள்ள வேகத்தடை முன்பு ரோடு சேதமடைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ரோடு சில நாட்களில் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதனால் அரசின் நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.