/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : செப் 08, 2024 11:42 PM

ராமேஸ்வரம் : வங்க கடலில் புயல் சின்னம் உருவானதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா கலிங்கப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கில், ஒடிசா கோபால்பூர் மற்றும் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில், மேற்குவங்கம் தொகை துறைமுகத்தில் இருந்து தெற்கில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்த தொலைதுார புயல் எச்சரிக்கையால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஆழ்கடலில் எச்சரிக்கையுடன் மீன்பிடித்து கரை திரும்பவும், பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.