/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பஸ் ஸ்டாண்டில் குடிநீரில்லை
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பஸ் ஸ்டாண்டில் குடிநீரில்லை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பஸ் ஸ்டாண்டில் குடிநீரில்லை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பஸ் ஸ்டாண்டில் குடிநீரில்லை
ADDED : ஆக 06, 2024 04:41 AM
திருவாடானை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.
திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அமர இருக்கைகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
பயணிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் செல்லும் போது குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஏழை தொழிலாளர்கள் தண்ணீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்க முடியாமல் தாகத்தால் தவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை முறையாக பராமரித்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.