/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெயரளவில் பி.எஸ்.என்.எல்., சேவை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
/
பெயரளவில் பி.எஸ்.என்.எல்., சேவை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
பெயரளவில் பி.எஸ்.என்.எல்., சேவை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
பெயரளவில் பி.எஸ்.என்.எல்., சேவை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 17, 2024 12:25 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பி.எஸ்.என்.எல்., 'நெட்வோர்க்' அடிக்கடி 'கட்' ஆவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு அலுவலகங்கள், பல வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் பொதுமக்கள் பலர் பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பி.எஸ்.என்.எல்., 'நெட்ஒர்க்' சேவை இடையிடையே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அவசரத்தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமப்படுகின்றனர்.
தொடரும் பி.எஸ்.என்.எல்., சேவை குறைபாட்டில் பலர் வேறு 'நெட்வோர்க்' சேவைக்கு மாறிவருகின்றனர்.
எனவே பி.எஸ்.என்.எல்., தொலைநிறுவனம் குறைபாடுகளை சரி செய்து சேவையை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.