/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் தகவல் போர்டு
/
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் தகவல் போர்டு
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் தகவல் போர்டு
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் தகவல் போர்டு
ADDED : ஏப் 03, 2024 06:59 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் தகவல் போர்டுகள் செயல்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை, திருப்பதி மீனாட்சி, கன்னியாகுமரி, வாராந்திர ரயில்களான ஹூப்ளி, பெரோஷ்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ், அயோத்தி, ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பயணிகள் அதிகளவில் உள்ளனர்.
இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் இரு இடங்களில் டிஜிட்டல் தகவல் போர்டுகள் உள்ளன.
இவை செயல்படவில்லை. இதில் ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், ரயிலின் எண், உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.
டிஜிட்டல் தகவல் போர்டுகள் வேலை செய்யாத நிலையில் ரயில் நிலையத்தில் தொடு திரை தகவல்களும் செயல்படவில்லை.
ராமநாதபுரம் வரும் ரயில் பயணிகளுக்கு எந்த ரயில் எப்போது வரும். எப்போது புறப்படும் என்ற எந்த தகவலும் தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் அலை மோதும் நிலை உள்ளது.
ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து செயல்படாமல் உள்ள டிஜிட்டல் தகவல் பலகைகள் செயல்பட செய்ய வேண்டும்.

