/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுகாதார நிலையத்தில் செயல்படாத ஜெனரேட்டர்: நோயாளிகள் அவதி
/
சுகாதார நிலையத்தில் செயல்படாத ஜெனரேட்டர்: நோயாளிகள் அவதி
சுகாதார நிலையத்தில் செயல்படாத ஜெனரேட்டர்: நோயாளிகள் அவதி
சுகாதார நிலையத்தில் செயல்படாத ஜெனரேட்டர்: நோயாளிகள் அவதி
ADDED : ஆக 23, 2024 03:53 AM

சாயல்குடி: சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரசவித்த பிறகு பராமரிக்கக் கூடிய கவனிப்பு வார்டு பகுதியில் மின்தடை நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படாத நிலை உள்ளது.
நோயாளிகள் கூறியதாவது: சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு, பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அரசு பல லட்சம் செலவழித்து ஜெனரேட்டர் வாங்கி பொருத்தி உள்ளனர். அவற்றை இயக்குவதற்கு முறையான பணியாளர் இல்லாத நிலை உள்ளது.
மின்தடையின் போது பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு கையில் உள்ள விசிறியால் வீச வேண்டி உள்ளது.
எனவே மின்தடை நேரங்களில் ஜெனரேட்டரை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் குறைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.