ADDED : பிப் 24, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுாரில் வீரமாகாளி கோயில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 2ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இதில் பெரிய மைதானத்தில் நீண்ட வடத்தால் கட்டப்பட்ட காளை அவிழ்த்து விடப்பட்டது. காளையை ஒன்பது வீரர்கள் அடக்குவதற்கு களம் இறக்கப்பட்டனர்.
20 நிமிடங்கள் போட்டி நேரம் குறிக்கப்பட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், காளையை வீரர்கள் அடக்கும் பட்சத்தில், வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அடக்கப்படாத காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியில், வென்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் போட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

