/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதை மாத்திரை கடத்தலில் பின்னணி அறிய ஆர்வமில்லை
/
போதை மாத்திரை கடத்தலில் பின்னணி அறிய ஆர்வமில்லை
ADDED : மே 26, 2024 12:23 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மே 24 இரவு இலங்கைக்கு கடத்தயிருந்த, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளை வேனில் கடத்தி சென்ற கடத்தல்காரர்கள், தமிழக போதை ஒழிப்பு தடுப்பு போலீசாரை கண்டதும் தப்பினர்.
அவர்களை பிடிக்க முடியாமல் போலீசாரும் கோட்டை விட்டனர். இதனால் கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளியை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
மே 3 ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில், 2.70 கோடி ரூபாய் மதிப்புள்ள இது போன்ற மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2023ல் வேதாளையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐந்து மாதங்களில் மட்டும் போலீசார் கைப்பற்றியதை விட பல கோடி ரூபாய் மதிப்பு மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இமாச்சல்பிரதேசத்தில் இருந்து மாத்திரைகளை நேரடியாக வாங்க முக்கிய புள்ளிகளால் மட்டுமே முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மே 24ல் தப்பிய கடத்தல்காரர்கள் கைதாகி இருந்தால் முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணையில் தெரிந்திருக்கும். ஆனால் கடத்தல் பின்னணியிலுள்ளவர்களை கண்டறிவதில் போலீஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.