/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பண்ணை குட்டை, பழக்கன்று, தேனி வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானியம் வழங்கல் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
/
பண்ணை குட்டை, பழக்கன்று, தேனி வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானியம் வழங்கல் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
பண்ணை குட்டை, பழக்கன்று, தேனி வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானியம் வழங்கல் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
பண்ணை குட்டை, பழக்கன்று, தேனி வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானியம் வழங்கல் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
ADDED : மே 25, 2024 05:56 AM
திருப்புல்லாணி : நடப்பாண்டில் தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் பழக்கன்றுள், காய்கறிகள் பயிர்களின் சாகுபடி பரப்பு விரிவாக்கத்திற்காகவும் உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பழங்கள், காய்கறிகள் விளைச்சலை அதிகரிக்க சாகுபடி பரப்பளவு விரிவாக்கத்திற்கு பழக்கன்றுகள் மற்றும் வீரிய விதைகள் வழங்குதல், நீர் ஆதாரத்தை பெருக்கிட தனியார் நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், பறவை தடுப்பு வலை அமைத்தல், நகரும் காய்கறி வண்டி வழங்குதல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், தேனி வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கை ஊக்குவித்தல், மிளகாய் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை ஊக்குவித்தல், கருவேல மரங்களை அகற்ற ஊக்கத்தொகை வழங்குதல் ஆகியவைகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நிரந்தர பந்தல் அமைத்தல், முருங்கை பரப்பளவு விரிவாக்கம் இவைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் மாடி தோட்டம் அமைக்கவும், ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல், தென்னை சாகுபடி பரப்பளவு விரிவாக்கம், காளான் வளர்ப்பு, குடில் அமைத்தல் ஆகியவற்றிற்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பனை மேம்பாட்டு இயக்கத்தில் பனங்கன்றுகள் வழங்கல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரிக்கும் கூடம் அமைத்தலுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு ஐந்து வகை பழச்செடி தொகுப்பு மானிய விலையில் ரூ.50க்கு வழங்கப்படுகிறது. பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் மற்றும் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் செடி தொகுப்பு மானிய விலையில் ரூ.15க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மானிய விலை திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் http://t horticulture.tn.gov.in/tnhortnet/login.ptp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மட்டுமே அனைத்து பலன்களும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

