/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ADDED : ஜூன் 30, 2024 04:40 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பயிற்சி ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி தலைமை வகித்தார்.
முதுநிலை விரிவுரையாளர் ருக்மணி ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்தும் திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் மாணவர்களுக்கான எளிய கற்பித்தல் முறைகள் குறித்தும் விளக்கினார்.
டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

