/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓம்சக்தி நகரில் ரோட்டில் கழிவு நீரால் துர்நாற்றம்: மாணவர்களுக்கு ஆபத்து

ADDED : மார் 26, 2024 11:38 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஓம்சக்தி நகரில் சாக்கடை பராமரிப்பின்றி ரோட்டில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றத்தால்அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்கு ஓம்சக்தி நகர் 13வது தெருவில் சாக்கடை கால்வாய் சரிவர பராமரிக்கப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ரோட்டில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது.
இவ்வழியாக பள்ளி, அலுவலங்களுக்கு நடந்து செல்லும் மாணவர்கள், மக்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
நோய் தொற்றுக்கு முன் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.