/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அருகே குறுகும் கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் ஆபீசர்ஸ்
/
கீழக்கரை அருகே குறுகும் கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் ஆபீசர்ஸ்
கீழக்கரை அருகே குறுகும் கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் ஆபீசர்ஸ்
கீழக்கரை அருகே குறுகும் கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் ஆபீசர்ஸ்
ADDED : ஜூன் 23, 2024 03:32 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே ஆக்கிரமிப்புகளால் கிழக்கு கடற்கரை சாலை குறுகி வரும் நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ.,ல் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை அமைந்துள்ளது. பிரதான சாலையான கிழக்கு கடற்கரை சாலையில் 2020 கொரோனாவிற்கு பிறகு கீழக்கரை நகரின் தோரண நுழைவாயிலுக்கு வடக்கு பகுதியில் அதிகளவு ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருகின்றன.
புதிதாக கட்டப்பட்டுஉள்ள வணிக வளாகங்கள்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலாக 10 முதல் 12 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பெரும்பாலான கடைகளின் நுழைவு வாயில் பகுதி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய அமைந்துள்ளதால் இரு சக்கர வாகனம், பாதசாரிகள்மற்றும் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்லக் கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் தற்போது வரை மவுனம் சாதித்து வருகின்றனர்.
கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஏர்வாடி முக்கு ரோடு செல்லும் ரோட்டின் இரு புறங்களிலும் நிறுத்தப்படும் டூவீலர், கார் உள்ளிட்ட சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்துார் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.