/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் 4 மாதங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் 4 மாதங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் 4 மாதங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் 4 மாதங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 30, 2024 04:50 AM
சாயல்குடி, : சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 2023 டிச.,ல் மழையால் கால்வாய் சேதமடைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சேதமடைந்த கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது.
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து துாத்துக்குடி செல்லும் சாலையில் இருபுறங்களிலும் மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய் 2010ல் அமைக்கப்பட்டது.
2023 டிச.,19ல் அண்ணா நகர், இருவழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுக்குளம், இலந்தை குளத்திலிருந்து மறுகால் பாய்ந்த வெள்ள நீர் நகர் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.
சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தனியாக வெள்ள நீர் செல்வதற்கு பாதை ஏற்படுத்தப்பட்டு நீரை பாதுகாப்பான முறையில் கடத்தினர்.
துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் வாறுகால் இயந்திரத்தின் உதவியால் தோண்டப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக சாலையின் இரு புறங்களிலும் சிமென்ட் கற்கள் மற்றும் கான்கிரீட் பூச்சு சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக கனரக வாகனங்கள் அரசு பஸ்கள், டூவீலர் ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மற்றும் மாதா சர்ச் செல்லும் வழியிலும் இரு புறங்களிலும் தோண்டப்பட்ட மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது. சாயல்குடியைச் சேர்ந்த பா.ஜ., முன்னாள் மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பு துறையினர் சேதமடைந்த கழிவுநீர் செல்லும் வாறுகால்களை சீரமைக்காமல் தற்போது வரை கிடப்பில் போட்டுள்ளனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியிலும் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர்.
சாயல்குடியின் உள்ளூர் பிரச்னைகளில் ஒன்றான கழிவு நீர் கால்வாய் சேதமடைந்தது பற்றி வாயை திறக்க மறுக்கின்றனர். ஓட்டு சேகரிக்க செல்லும் போது இதை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

