/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகளே காப்பாற்றுங்க: சாயல்குடியில் அழிக்கப்படும் பனைமரங்கள்
/
அதிகாரிகளே காப்பாற்றுங்க: சாயல்குடியில் அழிக்கப்படும் பனைமரங்கள்
அதிகாரிகளே காப்பாற்றுங்க: சாயல்குடியில் அழிக்கப்படும் பனைமரங்கள்
அதிகாரிகளே காப்பாற்றுங்க: சாயல்குடியில் அழிக்கப்படும் பனைமரங்கள்
ADDED : ஆக 23, 2024 03:55 AM

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமான பனைமரங்கள் ரியல் எஸ்டேட், செங்கல்சூளைகள் தேவைக்கும் சாயல்குடி சுற்றுவட்டாரத்தில் அழிக்கப்படுவதால் கருப்பட்டி காய்ச்சும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பனைமரங்களை பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சாயல்குடி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பனை மர தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. பனைமரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக உள்ள நிலையில் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரை கொண்டு கருப்பட்டி காய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வாழ்வாதாரத்திற்கு வருமானத்தை ஈட்டி வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். சாயல்குடி அருகே குதிரை மொழி பகுதியில் செங்கல் சூளைகளுக்காக பெருமளவு வெட்டி அழிக்கப்படும் பனை மரங்களால் 40 முதல் 80 ஆண்டுகள் வரையுள்ள பலன் தரும் பனை மரங்கள் அழிவை சந்திக்கின்றன.
வி.சி.வி.செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க கடலாடி தாலுகா தலைவர்: சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தொடர்கிறது. இதனை நம்பியுள்ள பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இப்பகுதியில் ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும், செங்கல் சூளைகளுக்காகவும் பனை மரங்கள் வெட்டி துண்டுகளாக சரக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் கடலாடி வருவாய் துறையினர், தமிழ்நாடு பனை வெல்ல வாரியத்தினர் உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் அழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என்றார்.