/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கிடாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமத்தை காலி செய்யும் அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
கீழக்கிடாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமத்தை காலி செய்யும் அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கிடாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமத்தை காலி செய்யும் அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கிடாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமத்தை காலி செய்யும் அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூன் 22, 2024 04:51 AM
வாலிநோக்கம்: ஒவ்வொரு கோடை காலத்திலும் குடிநீர் பிரச்சனை அதிகரிப்பதால் கீழக்கிடாரம் மக்கள் ஊரை காலி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வாலிநோக்கத்தில் இருந்து 8 கி.மீ.,ல் கீழக்கிடாரம் ஊராட்சி உள்ளது. கீழக்கிடாரம் ஊராட்சியில் தேவேந்திரர் நகர், முத்துச்சாமிபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 2000 பேரு-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
கடந்த 1999ல் 3000 லி., கொள்ளளவு கொண்ட நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்ட டேங்க் மூலம் சேதமடைந்த தொட்டியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகிக்க வழியில்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
புதிய தமிழகம் கட்சியின் கடலாடி ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது: கீழக்கிடாரம் ஊராட்சியில் தேவேந்திரர் நகர், இந்திரா நகர், முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் கிராம மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. குடம் தண்ணீர் ரூ.10க்கு வாங்குகின்றனர். வருமானத்தின் ஒரு பகுதியை குடிநீருக்கே செலவிட வேண்டி உள்ளது.
மற்ற கிராமங்களுக்கு எல்லாம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலையில் இப்பகுதி மட்டும் தொடர் புறக்கணிப்பில் உள்ளது.பலமுறை கடலாடி யூனியன் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தண்ணீர் பிரச்னை அதிகரித்ததால் கிராமத்தில் வசிப்பவர்கள் தண்ணீருக்காக வெளியூர்களில் குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் கடலாடி ஒன்றிய அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து தர வேண்டும் என்றார்.