ADDED : ஏப் 03, 2024 06:56 AM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 73.
இவருக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக நல்லிருக்கை கண்மாய் பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
அங்கு கை கால்களை கழுவுவதற்காக நல்லிருக்கை கண்மாய்க்குள் இறங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் சகதியில் சிக்கிக் கொண்டதில் மூச்சுத்திணறி இறந்தார்.
குடும்பத்தினர் அவரை கண்மாய் பகுதியில் தேடினர். ஏர்வாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை 8:00 மணிக்கு உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
