ADDED : மே 20, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 60. நேற்று மதியம் சத்திரக்குடிக்கு டூவீலரில் சென்றார். லாந்தை பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது அவரின் பின்னால் வந்த சரக்கு வாகனம் முத்துராமலிங்கம் டூவீலரில் மோதியது.
தலையில் பலத்த காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை இறந்தார். ராமநாதபுரம் நகர் போலீசார் தப்பியோடிய சரக்கு வாகன டிரைவர் சரவணனை 26, தேடி வருகின்றனர். ––
