ADDED : டிச 07, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 76. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பெட்டிக்கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பரமக்குடி ரோடு செட்டியமடை பகுதி வழியாக நடந்து சென்றார். ஆர்.எஸ்.மங்கலம நோக்கி சென்ற டூவீலர் மோதியதில் வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார்.
அப்பகுதி மக்கள் மீட்டு ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வெள்ளைச்சாமி பலியானார். டூவீலரை ஓட்டிச் சென்ற ஆர்.எஸ்.மங்கலம் அலிகார் சாலை பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் 37, மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.