/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு
/
ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு
ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு
ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு
ADDED : பிப் 22, 2025 10:36 PM
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் தங்க செயின் திருடப்பட்டது.
உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சேதுக்கரசி 80. இவர் நேற்று காலை 6:00 மணிக்கு தனது வயலுக்குச் சென்று வயலில் விளைந்த கத்திரிக்காய் பறித்து ராமநாதபுரம் பஜாரில் விற்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரம் சர்ச் பஸ் ஸ்டாப் அருகே காலை 8:30 மணிக்கு 11 ஏ டவுன் பஸ்சில் ஏறி ஊர் திரும்பினார். அப்போது சேதுக்கரசி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் செயின் திடீரென மாயமானது.
பதறியவர் அருகில் இருந்த பயணிகளிடமும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் நடந்ததை கூறி அழுதார். உத்தரகோசமங்கை போலீசில் மூதாட்டி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.