/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆவணி கடைசி முகூர்த்த நாள் கோயில்களில் திருமணம் அதிகம்
/
ஆவணி கடைசி முகூர்த்த நாள் கோயில்களில் திருமணம் அதிகம்
ஆவணி கடைசி முகூர்த்த நாள் கோயில்களில் திருமணம் அதிகம்
ஆவணி கடைசி முகூர்த்த நாள் கோயில்களில் திருமணம் அதிகம்
ADDED : செப் 17, 2024 04:09 AM
திருவாடானை, ஆவணி கடைசி முகூர்த்த நாளில் கோயில்களில் திருமணங்கள் அதிகரித்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் ஆவணி கடைசி முகூர்த்த நாளையொட்டி நேற்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி போன்ற பல மாதங்களில் முகூர்த்த நாட்களில் சுப விழாக்கள் அதிகமாக நடப்பது வழக்கம்.
நேற்று ஆவணி கடைசி முகூர்த்த நாள் என்பதால் அனைத்து திருமண மண்டபங்களிலும் விழாக்கள் நடந்தது. பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிப்பட்டனர்.
முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில்கள் முன்பு அதிகமான வாகனங்கள் நிறுத்தபட்டிருந்ததால் வழக்கமாக கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.