ADDED : ஜூலை 19, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : தேவிபட்டினம் அருகே பாப்பானேந்தலை சேர்ந்தவர் நாகராஜ் 49. நேற்று முன்தினம் இரவு ஊரிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் சென்றார்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வடவயல் அருகே சென்ற போது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற கார் மோதியதில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியானார். கார் டிரைவர் அத்தியூத்து ரிஸ்வான் அலி 28, மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.