/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார் மோதி ஒருவர் பலி: மரைன் ஏட்டு மீது வழக்கு
/
கார் மோதி ஒருவர் பலி: மரைன் ஏட்டு மீது வழக்கு
ADDED : ஏப் 11, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : ஆர்.எஸ். மங்கலம் அருகே உகந்தான்குடியை சேர்ந்தவர் விஸ்வநாதன் 58. அருகில் கடலுாரை சேர்ந்தவர் மாரிமுத்து 45. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கிழக்கு கடற்கரை ரோட்டில் டூவீலரில் சென்றனர்.
புதுப்பட்டினம் அருகே கார் மோதியதில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாரிமுத்து நேற்று மாலை இறந்தார். தொண்டி போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த ஏட்டு வீரசேகரன் 43, என்பவரை தேடுகின்றனர். வீரசேகரன் தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஏட்டாக பணியாற்றுகிறார்.

