/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உறவினர்கள் இடையே தகராறில் ஒருவர் கொலை
/
உறவினர்கள் இடையே தகராறில் ஒருவர் கொலை
ADDED : மே 30, 2024 10:29 PM

முதுகுளத்துார்:-முதுகுளத்துார் அருகே புழுதிக்குளம் கிராமத்தில் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
புழுதிக்குளத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி 40. இவர் பிரச்னையில் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான முருகன் மகன் கார்த்திக்ராஜாவை தாக்கினார். கார்த்திக்ராஜா அவரது மாமாவான மோகனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபால்சாமியிடம் மோகன் இதுகுறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன், கார்த்திக் ராஜா உட்பட 5 பேர் நேற்று கட்டையால் தாக்கியதில் கோபால்சாமி பலத்த காயமடைந்தார்.
பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்தார். புழுதிக்குளம் மோகன் 48, கார்த்திக்ராஜா, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் , மோகனை கைது செய்தார்.
தொடரும் கொலைகள்
முதுகுளத்துார் வட்டாரத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது. முத்து விஜயபுரத்தில் சொத்து பாகப்பிரிவினை பிரச்னையில் மாமனார் ,மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தார். தெற்கு காக்கூரில் மது போதையில் பிரச்னை செய்த தம்பியை அண்ணன் கொலை செய்தார். நேற்று உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.