/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரூ.2.10 கோடி நில மோசடியில் மேலும் ஒருவர் கைது
/
ராமநாதபுரத்தில் ரூ.2.10 கோடி நில மோசடியில் மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் ரூ.2.10 கோடி நில மோசடியில் மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் ரூ.2.10 கோடி நில மோசடியில் மேலும் ஒருவர் கைது
ADDED : செப் 04, 2024 01:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.2.10 கோடி நில மோசடி வழக்கில் கணவன், மனைவி கைதான நிலையில் மேலும் ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர்.
ராமநாதபுரம் சேதுபதி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பூமிவாசகன் 50. இவரிடம் மான்குண்டு மேற்கு நாரையூரணியை சேர்ந்த வெள்ளைச்சாமி தன்னிடம் பழங்குளம் பகுதியில் ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலம் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து பூமிவாசகன் ரூ.2.10 கோடிக்கு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து பெற்றார்.
அதன் பின் விசாரித்த போது தான் வேறு ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்த மோசடியில் வெள்ளைச்சாமி, மனைவி ஜான்சிராணி, மகள் அபர்ணா, உறவினர்கள் முத்துவயல் சோட்டாசாமி, காவேரிதாசன் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பூமிவாசகன் 5 பேர் மீதும் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சில நாட்களுக்கு முன் வெள்ளைச்சாமி, ஜான்சிராணியை கைது செய்தனர்.
மேலும் சோட்டாசாமி 65, என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அபர்ணா, காவேரிதாசனை தேடி வருகின்றனர்.