/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாயமான மீனவர்களில் ஒருவர் உடல் கண்டுபிடிப்பு
/
மாயமான மீனவர்களில் ஒருவர் உடல் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 29, 2024 02:12 AM

ராமேஸ்வரம்:கடந்த, ஆக. 26ல் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர்.
இவர்களை விடுவிக்கவும், கடலில் மூழ்கிக் காணாமல் போன இரண்டு மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரியும், நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், 700 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்த படகு, ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் மாயமான இரு மீனவர்களை தேடி, நேற்று மீட்புக்குழு மற்றும் மீன்துறை பாதுகாப்பு போலீசார் நடுக்கடலுக்கு சென்றனர்.
கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர்கள் இருவரில் கடலில் மிதந்த மீனவர் எமிரிட் உடலை மீட்டு நேற்று இரவு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு மீனவர் வெள்ளைச்சாமி உடலை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.
மூழ்கிய படகில் இருந்து தப்பி, நீந்தி, கச்சத்தீவில் தஞ்சம் அடைந்த மற்ற இரு மீனவர்கள், நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் துாதரக அதிகாரியிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். அவர்கள், ஓரிரு நாட்களில் விமானம் வாயிலாக சென்னை வர உள்ளனர்.