/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தன் பங்கேற்பு ஓய்வூதியம் பெறுவதில் வாரிசுதாரர்கள் ஜவ்வாக இழுத்தடிப்பு ஆன்லைனா, ஆப்லைனா குழப்பம்
/
தன் பங்கேற்பு ஓய்வூதியம் பெறுவதில் வாரிசுதாரர்கள் ஜவ்வாக இழுத்தடிப்பு ஆன்லைனா, ஆப்லைனா குழப்பம்
தன் பங்கேற்பு ஓய்வூதியம் பெறுவதில் வாரிசுதாரர்கள் ஜவ்வாக இழுத்தடிப்பு ஆன்லைனா, ஆப்லைனா குழப்பம்
தன் பங்கேற்பு ஓய்வூதியம் பெறுவதில் வாரிசுதாரர்கள் ஜவ்வாக இழுத்தடிப்பு ஆன்லைனா, ஆப்லைனா குழப்பம்
ADDED : மே 12, 2024 12:51 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதியம் பெற வாரிசுதாரர்கள் ஜவ்வாக இழுத்தடிக்கப்படுகிறார்கள். ஆன்-லைனில் விண்ணப்பித்தால் கிடைக்கவில்லை. ஆப் லைனில் அனுப்பினால் கிடைக்கிறது. இதனால் பணியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 2004 ஏப்., 1 முதல் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை அரசு தகவல் விவர தொகுப்பு மையம் செயல்படுத்தி வருகிறது. தன் பங்கேற்பு ஓய்வூதியத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் பெற்று தருவதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2024 ஏப்., முதல் இந்த ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆன் லைனில் பதிவு செய்ய வலியுறுத்தினர். ஆன் லைனில் பதிவு செய்த ஓய்வூதியர் வாரிசுதாரர்களின் விண்ணப்பங்களை ஏதாவது காரணம் காட்டி ரத்து செய்து திருப்பிஅனுப்புகின்றனர்.
ஆன் லைனில் விண்ணப்பம் பதிவு செய்யும் போது என்ன ஆவணங்கள்வழங்க வேண்டும் என்ற எந்த வழிகாட்டி நெறிமுறைகளும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஆவணங்களை அனுப்பினால் அதில் குறைகள் கூறி ரத்து செய்து திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அதே நேரம் ஆப் லைனில் அனுப்பினால் உடனடியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு விடுகிறது.
இதன் காரணமாக பணியாளர்கள் ஆப் லைனில் அனுப்புவதா, ஆன் லைனில் அனுப்புவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் 20 லட்சம் வரை பணப்பலன்கள் வழங்க வேண்டியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பில் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் உள்ளனர்.
ஓய்வூதியம் வழங்க வேண்டிய அரசு தகவல் விவர தொகுப்பு மையம் ஜவ்வாக இழுத்தடிப்பு செய்கிறது.