/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் ஆன்லைன் சர்வர் முடக்கத்தால் பணிகள் பாதிப்பு
/
ஊராட்சிகளில் ஆன்லைன் சர்வர் முடக்கத்தால் பணிகள் பாதிப்பு
ஊராட்சிகளில் ஆன்லைன் சர்வர் முடக்கத்தால் பணிகள் பாதிப்பு
ஊராட்சிகளில் ஆன்லைன் சர்வர் முடக்கத்தால் பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 04, 2024 03:45 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளில் ஒரு வாரமாக ஆன்லைன் பணிகள் முடங்கியதால் ஊராட்சிகளில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் வரவு, செலவு, மானிய விபரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவேஅனுப்பி வைக்கப்படுகிறது.
வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு டி.என்.பாஸ் எனப்படும் சாப்ட்வேர் மூலமாகவே ஊராட்சிகளில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பணம் பெறுவதற்கும் பணம் அனுப்புவதற்கும் உள்ள வங்கி பரிவர்த்தனைக்கான சாப்ட்வேர் முடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்நிலை தொடர்கிறது.
ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
ஊராட்சிகளில் துாய்மைப் பணியாளர், துாய்மைக் காவலர் ஊதியம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு மாதாந்திர செலவுகளை செய்வதற்கு டி.என்.பாஸ் பயனுள்ளதாக உள்ளது. ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அலைபேசி மூலம் ஓ.டி.பி., வரும் அவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம்.
தற்போது ஆன்லைன் சேவை முடங்கியதால் எவ்வித பணிகளும் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.

