/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைனில் பதிவேற்றம்: ஆசிரியர்கள் குமுறல் * ஆசிரியர்கள் குமுறல்
/
ஆன்லைனில் பதிவேற்றம்: ஆசிரியர்கள் குமுறல் * ஆசிரியர்கள் குமுறல்
ஆன்லைனில் பதிவேற்றம்: ஆசிரியர்கள் குமுறல் * ஆசிரியர்கள் குமுறல்
ஆன்லைனில் பதிவேற்றம்: ஆசிரியர்கள் குமுறல் * ஆசிரியர்கள் குமுறல்
ADDED : ஆக 25, 2024 02:30 AM
ராமநாதபுரம்:-தமிழகத்தில் கலைத்திறன் போட்டிகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்து ஆன்லைனில் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறையினர் அழுத்தம் கொடுப்பதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு, 3 முதல் 5 ம் வகுப்பு, 6 முதல் 8 ம் வகுப்பு, 9, 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தப்படவுள்ளன.
இந்தாண்டு 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மையக்கருத்து அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
தனிப்போட்டிகளில் ஒருவர் 3 போட்டிகளிலும், 2 குழுப்போட்டிகளிலும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் விபரங்களை சேகரித்து ஆன்லைனில் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
செப்., மாதத்தில் காலாண்டு தேர்வு துவங்கும் நிலையில் கலைத்திறன் போட்டிகள் நடத்தினால் மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். நெருக்கடியான நிலையில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அழுத்தம் கொடுத்து வருகிறது.
கலைத்திறன் போட்டிகளை பள்ளி துவங்கும் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும். தேர்வு நேரத்தில் மாணவர்களை தொல்லை செய்வதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.