/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ஊட்டி பிளம்ஸ் பழம் கிலோ ரூ.400
/
ராமநாதபுரத்தில் ஊட்டி பிளம்ஸ் பழம் கிலோ ரூ.400
ADDED : மே 16, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : சீசனை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்தில் பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி நடக்கிறது. குறிப்பாக பழங்கள் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து, வாரச்சந்தை, தினசரி சந்தையில் வியாபாரிகள் விற்கின்றனர். தற்போது பிளம்ஸ் பழம் சீசன் துவங்கியுள்ளால் கொடைக்கானல், ஊட்டியில் இருந்து ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ ரூ.400 வரை விற்கிறது.