ADDED : ஜூலை 23, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் திறந்த நிலையில் வாறுகால் உள்ளது. இங்கு ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. வாறுகாலில் மேல்முடி இல்லாததால் சிறுவர்கள், முதியவர்கள் விழுந்து காயமடைகின்றனர்.
சாயல்குடி மக்கள் கூறுகையில், சாலையின் இரு புறங்களிலும் சிமென்ட் ஸ்லாப் அமைத்தும் வாறுகால் மூடப்படாததால் கழிவு நீர் திறந்த நிலையில் செல்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகி துர்நாற்றம் வீசுகிறது. இதன் வழியாக செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வாறுகாலில் தரமான சிமென்ட் ஸ்லாப் மூடிகளை அமைக்க வேண்டும் என்றனர்.