ADDED : மே 16, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றிய எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் ரியாஸ் கான் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட பொருளாளர் ஹசன் அலி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சோமு, முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், தொழிற்சங்க நிர்வாகி முஸ்தாக் அகமது உட்பட பலர் பங்கேற்றனர். கோடை காலம் முடியும் வரை நீர் மோர் பந்தல் செயல்படும் என தெரிவித்தனர்.