/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்
/
ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கல்
ADDED : மே 05, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் திணறி வரும் வேளையில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோல் அளவை அதிகரிக்க ஓ.ஆர்.எஸ்., எனப்படும் உப்பு கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோடை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை நகராட்சிக்கு வருபவர்களுக்கு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தினமும் உப்பு கரைசல் வழங்கப்பட உள்ளது.
இதனை கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, கணக்காளர்கள் தமிழ்ச்செல்வன், உதயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.